Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணம் இன்று முதல் உயர்வு.. புதிய கட்டணம் எவ்வளவு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 19, 2025
in அரசியல் செய்திகள்
0
இனி கடைசி நேர சிக்கல் இருக்காது.. ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 01, 2025 6:38 AM IST

நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவைக்கான கட்டணங்களை ரயில்வே அமைச்சகம் உயர்த்தியுள்ளது.

ரயில் நிலையம் (கோப்பு படம்)ரயில் நிலையம் (கோப்பு படம்)
ரயில் நிலையம் (கோப்பு படம்)

ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம் ரயில் கட்டணங்களை திருத்தியுள்ளது. அதன்படி, திருத்தியமைக்கப்பட்ட புதிய ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், புறநகர் ரயில் பயணக் கட்டணங்கள் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புறநகர் அல்லாத பிற ரயில்களில் சாதாரண, ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் முதல் 500 கிலோ மீட்டர் தூர பயணத்திற்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை. 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 501 முதல் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐந்து ரூபாயும், ஆயிரத்து 501 முதல் 2 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 ரூபாயும், 2 ஆயிரத்து 501 முதல் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு 15 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு அரை பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, படுக்கை வசதி வகுப்பு மற்றும் முதல் வகுப்பில் பயணம் செய்வதாக இருந்தாலும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபர், அமிர்த பாரத், மகாமனா, கதிமான், அந்தியோதயா, ஜன் சதாப்தி, யுவா எக்ஸ்பிரஸ் உட்பட முதன்மை மற்றும் சிறப்பு ரயில்களுக்கும் இந்த கட்டணத்திருத்தம் பொருந்தும். அதேநேரம், துணை கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம், அதிவிரைவு ரயில் கூடுதல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விதிகளின்படி ஜிஎஸ்டி தொடர்ந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 அல்லது அதற்குப் பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்குத் திருத்தப்பட்ட கட்டணங்கள் பொருந்தும் எனவும், இந்த தேதிக்கு முன் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு எந்த மாற்றமும் இன்றி பழைய கட்டணமே பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகத்தின் இந்த கட்டண உயர்வால் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுக்கு ஆயிரத்து 450 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் பயணிகள் பிரிவில் மட்டும் ரயில்வே துறைக்கு 92 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 01, 2025 6:32 AM IST



.

Previous Post

மகாராஷ்டிரம் குஜராத் இடையே புது பிரச்னை!

Next Post

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 18 பேர் பலி, 23 பேர் மாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In