Last Updated:
தெலங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
தெலங்கானாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பசமைலாரம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருந்து தயாரிக்கப் பயன்படும் உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதனால் தொழிலாளர்கள் சிலர், சில மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 11 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 42 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மீட்கப்பட்டவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காணவில்லை என்றும் கூறப்படுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
July 01, 2025 1:54 PM IST

