Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

MDMK ; `கடைசி ஆயுதத்தை தான் என் மீது ஏவி இருக்கிறார் வைகோ’ – மல்லை சத்யா வேதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 15, 2025
in அரசியல் செய்திகள்
0
MDMK ; `கடைசி ஆயுதத்தை தான் என் மீது ஏவி இருக்கிறார் வைகோ’ – மல்லை சத்யா வேதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“முன்பெல்லாம் தலைவரிடம் மிக எளிமையாக பேசி விடுவோம். இப்போது அவரிடம் அவ்வளவு எளிமையாக பேசிவிட முடியாது. தொலைபேசியில் அவரை எளிமையாக ரீச் செய்ய முடியாது. கடந்த ஒன்பதாம் தேதி துரோகி என எனக்கு பட்டம் கொடுத்த பிறகு தலைவரிடம் பேசுவதற்காக அவருக்கு கால் செய்தேன், அழைப்பு எடுக்கவில்லை. தலைவரிடம் பேச முடியாத ஒரு சூழல், துரை யாரை சொல்கிறாரோ அவரிடம் தான் அவர் பேச வேண்டும் என்ற சூழலுக்கு அவர் தள்ளப்படுகிறார். இப்படி இருக்கும் பொழுது நான் யாரிடம் சென்று நிற்க முடியும்.

தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்கள். எங்கள் கட்சியில் உள்ள ஒரு தம்பி அவருடைய முகநூல் பதிவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் வைகோ, மல்லை சத்யா ஆகிய படங்களை இணைத்து பதிவு ஒன்றை போடுகிறார். இது ரொம்ப நாள் முன்னாடி நடந்தது. ஆனால் சமீபத்தில் எங்கள் கட்சியில் உள்ள ஒரு வழக்கறிஞர் பெரியார், அண்ணா, தலைவர் வைகோ, துரை இந்த படங்களை இணைத்து இதனை ஏற்றுக் கொண்டால் இருங்கள். இல்லை என்றால் வெளியேறுங்கள் என்றார்.

மல்லை சத்யா

மல்லை சத்யா

நீங்கள் 30 ஆண்டுகால விசுவாசிகள் மட்டுமல்ல. நீங்கள் 300 ஆண்டுகள் ஆனாலும் எங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் தான் என்று ரொம்ப நாளுக்கு முன் பதிவிட்ட என்னுடைய படத்தை இணைத்து பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் என்னுடைய படத்தை போடாமல் இருந்தால் கூட நான் கடந்து போய் இருப்பேன். இதற்கு பெயர் ஆண்டான் அடிமை தனம். இது ஆதிக்க வர்க்க கண்ணோட்டம். என்னுடைய தரப்பில் நான் கேள்வி கேட்டேன். ஆனால் அவரை கண்டிக்கவும் இல்லை.

தலைவர் ஏதோ பேசி விட்டார் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நேற்றைய முன்தினம் துரை வைகோ ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார். அதில் நான் மக்கள் விரோத போக்கில் ஈடுபடுபவன் என்றும், அவர் ஒரு பெரிய சமூக விரோதி என்ற நிலமைக்கு என்னை சித்தரித்து பேசுகிறார்.

என்னுடைய மனைவி கவுன்சிலராக இருக்கிறார். ஒட்டுமொத்த மகளிர் அணியும் அவருக்கு சீட்டு கொடுக்க கூடாது என்று சொன்னார்கள் இருந்தும் நான் சீட்டு கொடுத்தேன் என்று பேசி உள்ளார். இவர்கிட்ட நாங்க சீட்டு கேட்டு நிற்கவில்லை. திமுக கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி மற்ற இடத்தில் வாங்குவதுபோல அந்த இடத்தில் ஒரு மூன்று சீட்டு எங்கள் கட்சிக்கு வாங்கினோம். அந்த மூன்று சீட்டு ஒரு மகளிர் சீட் இருந்தது. அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை அதனால் என்னுடைய மனைவியை நிற்க வைத்தேன். அப்படி ஒரு பெண் அதிகாரத்திற்கு வருவதை உங்களால் ஜீரணக்க முடியவில்லை. எனவே நாங்கள் உங்களுக்கு சீட்டு தர வேண்டுமா என்றெல்லாம் துரை வைகோ பேசியுள்ளார்.

ஒரு பொது புத்தி கூட இல்லை

கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சீட்டு வாங்கியது நான்தான். அது கட்சி தலைவரிடம் நான் பேசி முடிவு எடுத்தது. என்னை நீங்கள் என்னவென்றாலும் பேசலாம் ஆனால் என்னுடைய மனைவி பற்றி பேச கூடாது. இது தவறான புரிதல். இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவர் இன்னும் பண்பட்டு வரவில்லை என்று தோன்றுகிறது. துரை வைகோவிற்கு ஒரு பொதுவான ஒரு பொது புத்தி கூட இல்லை என்பதுதான் இது காட்டுகிறது. ”



.

Previous Post

கூலி டிரைலர் எப்போது?

Next Post

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு Senthil Balaji

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமைச்சர் கே.என். நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து! KN Nehru

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு Senthil Balaji

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In