Last Updated:
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தை தீபக் யாதவால் சுட்டுக்கொல்லப்பட்டார். மகளின் வருமானத்தில் வாழ்வதாக கேலி செய்ததால் ஆத்திரமடைந்த தீபக், ராதிகாவை சுட்டதாக கூறப்படுகிறது.
மகளின் வருமானத்தில் வாழ்வதாக சுற்றத்தார் தன்னை கேலி செய்ததால் ஆத்திரமடைந்து டென்னிஸ் வீராங்கனையான மகளை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச அளவில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தவர் 25 வயதான ராதிகா யாதவ். இவர் குருகிராம் பகுதியில் டென்னிஸ் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது தாயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை சமையல் அறையில் இருந்தப்படி செய்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த அவரது தந்தை தீபக் யாதவ், துப்பாக்கியால் ராதிகாவை சுட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ராதிகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உளளனர். இது தொடர்பான ராதிகாவின் சகோதரர் அளித்த புகாரின் படி, தந்தை தீபக்கை போலீசார் கைது செய்தனர்
அவரிடம் நடத்திய விசாரணையில்,மகள் டென்னிஸ் பயிற்சி பள்ளி நடத்துவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், பல முறை கூறியும் ராதிகா அந்த பயிற்சி பள்ளியை தொடர்ந்து நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், தன்னை மகளின் வருமானதில் வாழ்வதாக மற்றவர்கள் கேலி செய்ததாகவும், இன்ஸ்டாகிராமில் ராதிகா ரீல்ஸ் பதிவிட்டு வந்ததாலும் ஆத்திரத்தில் சுட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறு வயதில் இருந்து ராதிகாவின் டென்னிஸ் பயணத்திற்கு தீபக் பக்க பலமாக இருந்ததாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறும் நிலையில் அவரே மகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
July 11, 2025 1:47 PM IST

