Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்தியாவில் ஏற்பட்ட சேதத்தை குறித்து ஒரு படத்தை முடிந்தால் காட்டுங்கள்” – ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2025
in அரசியல் செய்திகள்
0
“இந்தியாவில் ஏற்பட்ட சேதத்தை குறித்து ஒரு படத்தை முடிந்தால் காட்டுங்கள்” – ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 11, 2025 5:36 PM IST

“ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு எந்த இழப்பும் இல்லை” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

அஜித் தோவல் அஜித் தோவல்
அஜித் தோவல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த ஒரே ஒரு புகைப்படத்தைக் காட்டுங்கள்” எனத் தெரிவித்து, இந்தியா எந்த இழப்பையும் சந்திக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் ஐஐடியின் 62வது பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய அஜித் தோவல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது, “வெளிநாட்டு பத்திரிகைகள், பாகிஸ்தான் இதைச் செய்தது, அதைச் செய்தது எனப் பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டது என்றால், ஒரு புகைப்படத்தையாவது காட்ட முடியுமா? ஒரு கண்ணாடி உடைந்த படத்தையாவது காட்ட முடியுமா? ஆனால், மே 10ஆம் தேதிக்கு முன்பும் பின்பும் பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் படங்கள் காட்டப்படுகின்றன.

சர்கோதா, ரஹீம் யார் கான், சக்லாலா என எதுவாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு ஊடகங்கள் படங்களின் அடிப்படையில் வெளியிட்டதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாம் அதனைச் செய்யத் தகுதியானவர்கள்” எனப் பேசினார்.

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத நிலைகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் சிதைக்கப்பட்ட பயங்கரவாத நிலையங்களின் படங்களும் வெளியாகின என்பது நினைவுகூரத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 11, 2025 5:36 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இந்தியாவில் ஏற்பட்ட சேதத்தை குறித்து ஒரு படத்தை முடிந்தால் காட்டுங்கள்” – ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் பேச்சு



.

Previous Post

குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்| Question paper for Group 4 exam not leaked

Next Post

மகாராஷ்டிரத்தில் 3,367 ஒலிபெருக்கிகள் அகற்றம்: முதல்வர் ஃபட்னவீஸ்! ஏன்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிரத்தில் 3,367 ஒலிபெருக்கிகள் அகற்றம்: முதல்வர் ஃபட்னவீஸ்! ஏன்?

மகாராஷ்டிரத்தில் 3,367 ஒலிபெருக்கிகள் அகற்றம்: முதல்வர் ஃபட்னவீஸ்! ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In