அடுத்து தேனி பெரிய குளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு `இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் 48″ திட்டத்தின் கீழ் உயிா்காக்கும் அவசர சிகிச்சைக்காக புதிதாக 2 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிதாக சிடி ஸ்கேன் வாங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் 7 வருடம் உபயோகிக்கபட்ட பழமையான சிடி ஸ்கேனரை வாங்கியதாக பில்களில் இருந்தது.
இது குறித்து மருத்துவமனையின் இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்ட வேல்முருகன் மதியம் ஆய்வு கூட்டத்தில் இதற்கான பதிலை தர வேண்டும் இல்லையென்றால் “அரசுக்கு தவறான தகவலை காட்டியுள்ளதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அடுத்து தீடீரென பொம்மையாகவுண்டன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் சத்துணவு கூடத்தில் மின்சாரம் இல்லாமல் இருந்தது.
அதை பார்த்த வேல்முருகன் “மின்சாரம் இல்லாமல் எப்படி உணவு தயாரிக்கிறீர்கள் உணவில் பல்லி, பூரான் ஏதாவது விழுந்தால் கூட தெரியாது” என்று கடிந்து கொண்டார். உடனே மின்சார வசதி செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார். மதியம் நடந்த கூட்டத்தில் பேசிய வேல்முருகன் அரசு பள்ளிக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
