Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு” – வாக்காளர் சிறப்பு திருத்தம் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 11, 2025
in அரசியல் செய்திகள்
0
“தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு” – வாக்காளர் சிறப்பு திருத்தம் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 10, 2025 3:43 PM IST

பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஒரு சட்டசாசன அமைப்பு என தெரிவித்தது.

உச்சநீதிமன்றம்உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பிகாரில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் பல லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை இழக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துவருகின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் வழக்குகளை தொடர்ந்தன. அதனை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டன.

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் இந்த வழக்குகளை எல்லாம் இன்று விசாரணைக்கு எடுத்தது. அதன்படி, இந்த வழக்குகள் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், அந்த காலகட்டத்துக்குள் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முடிக்க முடியாது. தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவால், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

குறிப்பாக பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மிகவும் பாதிக்கப்படுவர். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் தரப்பில், எந்த வாக்காளரும் விடுபடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களைத் தவிர அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

நாங்கள் வாக்காளர்கள் மீது சுமையை திணிக்காமல் எங்கள் மீதே சுமையைத் திணித்து வீடு வீடாக சென்று வாக்காளர்களை தீவிர சரிபார்ப்பு பணி மேற்கொள்கிறோம். தற்போது நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அவை முடிவடைந்த பின்னர் முடிவுகளை எடுக்கலாம். நவம்பர் மாதம் பீகாரில் தேர்தல் நடைபெற உள்ளது. வேண்டுமானால் நீதிமன்றம் பின்னர் எங்களை நிறுத்தலாம். தற்போது ஏன் நிறுத்த வேண்டும்? என வாதம் வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் நிறுத்துவோம். தேர்தல் ஆணையம் ஒரு சட்டசாசன அமைப்பு. சட்டசாசனத்தின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் எனத் தெரிவித்து, வழக்கை 10ஆம் தேதிக்கு உத்தரவிட்டனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 10, 2025 3:41 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் சாசன அமைப்பு” – வாக்காளர் சிறப்பு திருத்தம் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து



.

Previous Post

MDMK; Vaiko; தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தான் செய்த மிகப்பெரிய தவறு குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியிருக்கிறார்.

Next Post

நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

நாம் தமிழர் கட்சியின் ஆடு-மாடுகளின் மாநாடு: நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In