தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் “உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15-ஆம் தேதி தொடங்கி திசம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய உணவை வழங்காமல் பறித்து வைத்துக் கொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்குவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையோ, அதைவிட மோசமான ஏமாற்று வேலை தான் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ ஆகும். இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் தமிழ்நாட்டில் வரும் 15-ஆம் தேதி முதல் நடத்தப்படவிருப்பதாகவும், அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட போவதில்லை; யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கவும் போவதில்லை.
