Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியின் ரம்மியமான காட்சியை பகிர்ந்த இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… வைரல் பதிவு…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2025
in அரசியல் செய்திகள்
0
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியின் ரம்மியமான காட்சியை பகிர்ந்த இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… வைரல் பதிவு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:July 08, 2025 1:58 PM IST

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமான MyGovIndia-வில், சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 ஜன்னல்களைக் கொண்ட குபோலாவின் முனையில் அமர்ந்து பூமியை ரசிக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.

News18News18
News18

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து, பூமியைத் தொடர்ந்து கவனித்த முதல் இந்தியராக, குழுவின் கேப்டனான சுபன்ஷு சுக்லா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜூன் 26, 2025 அன்று, ஆக்ஸியம்-4 (Axiom-4) விண்வெளி பயணத்தின் பைலட்டாக, அவர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தார்.

இந்த வரலாற்று சாதனையை அடுத்து, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமான MyGovIndia-வில், சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 7 ஜன்னல்களைக் கொண்ட குபோலாவின் முனையில் அமர்ந்து பூமியை ரசிக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள், பூமியின் அழகான தோற்றத்தையும், இந்தியாவின் விண்வெளி சாதனையையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கின்றன.

அந்த பதிவில், “விண்வெளியில் இருந்து கீழே பார்க்கும் பார்வை! என்று குறிப்பிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தின் 7 ஜன்னல்கள் கொண்ட குபோலா தொகுதியிலிருந்து பூமியின் பிரம்மிப்பான காட்சியை குழுவின் கேப்டனான சுபன்ஷு சுக்லா ரசிக்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்களில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுபன்ஷு சுக்லா ஒரு வாரத்தை அங்கு கழித்துள்ள நிலையில், இந்த பயணம் அவருக்கு மிக முக்கியமான தருணமாக அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

Gazing Down From The Space!


Group Capt Shubhanshu Shukla enjoys the stunning panoramic view of Earth from the 7-windowed Cupola Module aboard the International Space Station. It’s been a remarkable journey as he marks a week in orbit, representing India among the stars.#Axiom4… pic.twitter.com/E9XKZIatng

— MyGovIndia (@mygovindia) July 6, 2025

புளோரிடாவில் இருந்து விண்ணில்…

ஜூன் 25 அன்று, நாசாவின் புளோரிடா கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஆக்ஸியம்-4 மிஷன் ஏவப்பட்டது. சுபன்ஷு சுக்லாவுடன், மூத்த அமெரிக்க விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்து விஞ்ஞானி ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, ஹங்கேரிய விண்வெளி வீரர் திபோர் கபு ஆகியோரும் அவருடன் பயணித்தனர். 28 மணி நேர பயணத்திற்குப் பிறகு, அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தனர்.

பயணத்தின் முக்கிய நோக்கம்: மயோஜெனிசிஸ்

சுபன்ஷு சுக்லா தற்போது விண்வெளியில் 10 நாட்கள் முழுமையாக நிறைவு செய்துள்ளார். அவரது பயணத்தின் முக்கியமான பகுதி, மயோஜெனிசிஸ் எனப்படும் ஆய்வாகும். இது நுண் ஈர்ப்பு விசையில் தசை சிதைவை எவ்வாறு விரைவாக்குகிறது என்பதை ஆராய்கிறது.

நிலையற்ற ஈர்ப்பு விசை இருக்கும் சூழலில், விண்வெளி வீரர்களின் எலும்புத் தசைகள் சீரான முறையில் சிதையக்கூடிய அபாயம் உள்ளது. இந்த மாற்றங்கள் மூலக்கூறு மற்றும் செல்லுலார் நிலை மாற்றங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், இந்த ஆய்வு எதிர்கால மற்றும் நீண்டகால விண்வெளி வாழ்வை உருவாக்குவதில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 08, 2025 1:58 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியின் ரம்மியமான காட்சியை பகிர்ந்த இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா… வைரல் பதிவு…



.

Previous Post

மிகக் குறைந்த விலையில்! டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் பட்ஜெட் 5ஜி!

Next Post

கருடன் நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கருடன் நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

கருடன் நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In