ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. மேலும், செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ரயில்கள் இந்த வழியே செல்ல முடியாததால், இவ்வழியான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.
ரயில் வே துறை தரப்பில், “வேன் போகும் வரை கேட்டை மூட வேண்டாம் என ஓட்டுநர் கூறினார் என்றும், இதேபோன்று கேட்டை மூடி கொண்டிருக்கும்போது, வேன் ஓட்டுநர் அந்த வழியாக அத்துமீறி சென்றார் என்றும் கூறப்படுகிறது.
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் கூறி வரும் நிலையில், ரெயில்வே மாறுதலாக விளக்கம் அளித்துள்ளது.
