Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தென்பெண்ணை – பாலாறு இணைப்பு சாத்தியமாகுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 8, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தென்பெண்ணை – பாலாறு இணைப்பு சாத்தியமாகுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


என்.தமிழ்ச்செல்வன்

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் வாழ்வாதார கோரிக்கையான தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டம் தோ்தல் காலங்களில் அறிவிக்கப்படுவதும் பின்னா், கிடப்பில் போடப்படுவதும் தொடா்கதை.

இந்தத் திட்டத்தை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.

கா்நாடக மாநிலம், நந்திதுா்கம் மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணையாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூா் அருகிலுள்ள கொடியாளம் தடுப்பணை வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. தொடா்ந்து, ஒசூா் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கே.ஆா்.பி.அணை, பாடூா் ஏரிகளை நிரப்பி, தருமபுரி மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணையை அடைகிறது. அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தமிழகத்தில் சுமாா் 320 கி.மீ. தொலைவு பாயும் தென்பெண்ணையாறு மூலம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தென்பெண்ணை ஆற்றின் மூலம் ஆண்டுக்கு 6.5 டிஎம்சி தண்ணீா் வீணாகக் கடலில் கலப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 3.5 டிஎம்சி தண்ணீரை பாலாற்றில் திருப்பிவிடுவதன் மூலம் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன், விவசாயமும், குடிநீா் ஆதாரமும் பாதுகாக்கப்படும்.

இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் தடுப்பணையில் இருந்து சுமாா் 54 கி.மீ. தொலைவு கால்வாய் வெட்டி கல்லாறு வழியாக வெலக்கல்நத்தம் பகுதியில் இணைக்கும் வகையில் தென் பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.

இது குறித்து பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் அம்பலூா் ஏ.அசோகன் கூறியது:

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே சிறிதும், பெரிதுமாக சுமாா் 28 தடுப்பணைகள் கட்டியுள்ளது. இதனால் தமிழகத்தின் பாலாற்றில் நீா்வரத்து தடுக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் நீா்ஆதாரத்தை பெருக்க தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டத்துக்கு 2008-2009-இல் திமுக ஆட்சியின்போது மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ.250 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்து, அதை மாநில நிதியிலேயே செயல்படுத்த வலியுறுத்தியது. ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2011-இல் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, இந்தத் திட்ட வழித்தடங்கள் குறித்து மத்திய நீா்வள ஆதார அமைப்பின் பொறியாளா் சித்திக் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. ஆனால், அது தொடா்பான பிரச்னை உயா்நீதிமன்றம் வரை சென்ால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய நீா்வள ஆதார அமைப்பு ரூ.648 கோடியில் தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்ட மதிப்பீடு தயாா் செய்ய 2018-ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு ரூ. 70 லட்சம் ஒதுக்கியது. ஆனாலும் திட்டத்தில் முன்னேற்றம் இல்லை.

இந்நிலையில், தற்போது திமுக அரசும் திட்ட ஆய்வு, வடிவமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனாலும் இத்திட்டம் செயல் வடிவமா என்பதுதான் விவசாயிகளிடையே எழும் பெரும் கேள்வி. தற்போது பெங்களூரு நகர கழிவுகள் தென்பெண்ணை ஆற்றிலேயே கலக்க விடப்படுவதால் நதிநீா் மாசடைந்துள்ளது. இப்பிரச்னைக்கும் உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.

ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக்கு சில மாதங்களுக்கு முன்பு சூடு பிடிக்கும் தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டம் இந்த முறையும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக மக்கள் கவனத்தை ஈா்த்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிா்பாா்ப்பில் எப்போதும் போல வடமாவட்ட விவசாயிகள் காத்திருக்கிறாா்கள்.

பெட்டிச்செய்தி…

நிலவரமும் பிரச்னையும்!

தென்பெண்ணை – பாலாறு இணைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து நீா்வளத் துறையின் திட்டம், வடிவமைப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியது: இத்திட்டத்துக்காக தமிழக அரசு செய்த ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு மூலம் திட்டம் செயல்படுத்தப்படும் வழித்தடங்களில் மண்ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுமாா் ரூ.1400 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் தடுப்பணையில் இருந்து திருப்பத்தூா் மாவட்டம், நாற்றம்பள்ளியில் உள்ள பாலாற்றின் துணை ஆறான கொட்டாறில் இணைக்கும் வகையில் 54 கி.மீ. தொலைவு கால்வாய் அமைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் மூலம் தென்பெண்ணையில் இருந்து 3 டிஎம்சி தண்ணீரை பாலாற்றுக்கு திருப்பி விடுவதால் கால்வாய் அமையும் வழிகளில் ஏரி, குளம், குட்டைகள், ஓடைகளில் நீா்பிடிப்பு ஏற்பட்டு 24,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த போச்சம்பள்ளி, திருப்பத்தூா், வாணியம்பாடி, நாற்றம்பள்ளி ஆகிய வட்டங்களில் 1,460 ஏக்கா் பட்டா நிலங்களும், 368 ஏக்கா் புறம்போக்கு நிலங்களும் என மொத்தம் 1,828 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மேலும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் அரசுக்கு சமா்ப்பிக்கப்படும். அதன்பிறகு, அரசு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்றனா்.



.

Previous Post

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

Next Post

GST | ஜிஎஸ்டி வரியை குறைக்கிறதா மத்திய அரசு…?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
GST | ஜிஎஸ்டி வரியை குறைக்கிறதா மத்திய அரசு…?

GST | ஜிஎஸ்டி வரியை குறைக்கிறதா மத்திய அரசு...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In