Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!’ – தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி | Maharashtra lives on our money: BJP MP dares Thackeray brothers

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 7, 2025
in அரசியல் செய்திகள்
0
`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!’ – தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி | Maharashtra lives on our money: BJP MP dares Thackeray brothers
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி சேதப்படுத்தினர். எனவே மராத்தி பெயரில் வன்முறையில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்து இருந்தார். மராத்தி பிரச்னையில் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இணைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, தாக்கரே சகோதரர்களை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக துபே அளித்த பேட்டியில், “நீங்களா மராத்தி பேச ஆரம்பித்தீர்கள். யார் பிரெட்டை நீங்கள் சாப்பிடுகிறீர்கள். எங்களது பணத்தில் மகாராஷ்டிரா வாழ்கிறது. டாடா முதலில் பீகாரில் தான் தொழிற்சாலை அமைத்தது. நீங்கள் என்ன வரி கட்டுகிறீர்கள். உங்களிடம் தொழிற்சாலைகள் இருக்கிறதா?. எங்களிடம் சுரங்கங்கள் இருக்கிறது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கரில் சுரங்கங்கள் இருக்கிறது. உங்களிடம் சுரங்கம் இருக்கிறதா?. ரிலையன்ஸ் குஜராத்தில் ஆயில் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தொடங்கி இருக்கிறது. செமிகண்டக்டர் உட்பட அனைத்து தொழிற்சாலைகளும் குஜராத் வருகிறது.

இந்தி பேசும் எங்களை கொலை செய்யும் உங்களுக்கு துணிச்சல் இருந்தால் உருது பேசும் மக்களை கொலை செய்து பாருங்கள். துணிச்சல் இருந்தால் பீகார், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் செல்லுங்கள். உங்களை அடித்தே கொன்றுவிடுவார்கள். மும்பைக்கு மாநகராட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேயின் செயல் அவர்களை மேலும் பின் தங்கச் செய்துவிடும். மும்பை மாகிம் தர்கா பகுதிக்கு சென்று இந்தி, உருது பேசுபவர்களை கொலை செய்யுங்கள் பார்க்கலாம். அப்படி செய்தால் அவர்களை பால் தாக்கரேயின் வாரிசுகள் சொல்வேன்”‘ என்று தெரிவித்தார்.

நிஷிகாந்த் துபே ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க எம்.பியாக இருக்கிறார். துபே இது போன்று பேசி இருக்கும் நிலையில், இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறுகிறது என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “இந்தி பேசும் மாநிலங்கள் அனைத்தும் எங்களுக்கு பின்னால் இருக்கின்றன. இந்தி பேசுபவர்களை விட நாங்கள் முன்னேறி இருக்கிறோம். அப்படியிருக்கும் போது நாங்கள் ஏன் இந்தி படிக்கவேண்டும். இந்தி பேசும் மாநிலங்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கின்றன” என்றும் ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.



.

Previous Post

ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு!

Next Post

ஆக. 1 வரை இந்தியாவுக்கு கால அவகாசம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆக. 1 வரை இந்தியாவுக்கு கால அவகாசம்!

ஆக. 1 வரை இந்தியாவுக்கு கால அவகாசம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In