Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குப்பை லாரியில் கிடந்த பெண்ணின் சடலம்.. லிலிங் டூ கெதரில் நடந்த என்ன? – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 30, 2025
in அரசியல் செய்திகள்
0
குப்பை லாரியில் கிடந்த பெண்ணின் சடலம்.. லிலிங் டூ கெதரில் நடந்த என்ன? – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கர்நாடக மாநிலம் பெங்ளூருவில் சென்னம்மனகெரே பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில், அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர், குப்பைகளை போடச் சென்றுள்ளார். அப்போது, அங்கு கிடந்த கவரை பார்த்ததும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கிடந்த கவரை பிரித்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த கவருக்குள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த ஒருவர், அதை குப்பை லாரியில் வீசிச் சென்றதை கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷம்சுதீன் என அடையாளம் காணப்பட்டது. திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையான இவர், வேலை காரணமாக பெங்களூருவில் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே, தன்னுடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய ஆஷா என்பவருடன் நட்பாக பழகியுள்ளார். அந்த பெண்ணுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்த சூழலில், தனக்கு ஆறுதலாக இருந்த ஷம்சுதீனுடன், ஆஷா நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் நெருக்கம் அதிகரித்ததால் ஒரே வீட்டில் கணவன் – மனைவி போன்று லிவிங் டுகெதரில் இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், அண்மைக் காலமாக இரவில் மது போதையில் இருக்கும் ஆஷா, சில நண்பர்களுடன் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார்.  இதனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை, சச்சரவாகியுள்ளது.

இதையும் படிங்க: உயிரிழந்த அஜித் குமார் என்ன தீவிரவாதியா..? போலீஸ் தாக்கியது ஏன்..? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

இதில், கடந்த சனிக்கிழமை அன்று சண்டை எல்லை மீறியதால், ஆஷாவை கொலை செய்யும் அளவிற்கு ஷம்சுதீன் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறியதும் ஆஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை கட்டி, பெரிய கவரில் வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே எடுத்து வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த மாநகராட்சி குப்பை லாரியில் உடலை வீசிச் சென்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர், உடலை குப்பை லாரியில் வீசி சென்ற சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

June 30, 2025 3:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

குப்பை லாரியில் கிடந்த பெண்ணின் சடலம்.. லிலிங் டூ கெதரில் நடந்த என்ன? – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!



.

Previous Post

டூரிஸ்ட் ஃபேமிலி மொத்த வசூல் இவ்வளவா? tourist family collection

Next Post

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In