Last Updated:
உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் டேங்கில் படுத்துக்கொண்டு பைக் ரைடு செய்த ஜோடிக்கு 53,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் காதலனுடன் ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது படுத்துக்கொண்டே லூட்டி அடித்த இளம்பெண்ணின் வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் பிரோசாபாத்தில் உள்ள சாலை ஒன்றில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் ஆபத்தான முறையில் பைக் ரைடு சென்றுள்ளார். பைக் பெட்ரோல் டேங்க் மீது கட்டிலில் படுப்பது போல ஒய்யாரமாக படுத்தப்படி, காதலனின் முகத்தை ரசித்து கொண்டே ரெக்கையில்லாமல் பறந்துள்ளார். இப்படி சாகச காதலில் மூழ்கி, சாவகாசமாக பயணித்த ஜோடியை வாகன ஓட்டி ஒருவர் கண்டித்துள்ளார்.
கீழே விழுந்தா என்ன ஆகும்? என கேட்டதற்கு, கொதித்தெழுந்த ஜோடி, அதை கேட்க நீ யார்? என தெனாவட்டாக பேசியுள்ளனர். லேசாக சறுக்கினால்கூட, சம்பவமாகிவிடும் என்பதை மறந்து சாகச காதலில் ஈடுபட்ட வீடியோ தீயாய் பரவ வாகன ஓட்டிகளுக்கு இடஞ்சல் ஏற்படுத்திய இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டீசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
आगरा–कानपुर नेशनल हाईवे पर कपल के रोमांस का Video –
जिला फिरोजाबाद में रात 10 बजे के वक्त लड़का–लड़की चलती हुई बाइक पर ऐसे बैठे नजर आए। लड़की तेल की टंकी पर लेटी हुई थी और लड़का बाइक ड्राइव कर रहा था। किसी राहगीर ने Video बना लिया।
ब्रज भाषा में Conversation सुनिए इनका… pic.twitter.com/L23FroQi27
— Sachin Gupta (@SachinGuptaUP) June 28, 2025
இந்த நிலையில் பெட்ரோல் டேங்கில் படுத்துக்கொண்டே பைக் ரைடில் எல்லைமீறிய ஜோடிக்கு போலீசார் 53ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். காதல் சாகசம் என்ற மிதப்பில் எல்லைமீறிய ஜோடிக்கு, அவர்கள் பயணித்த பைக்கின் விலைக்கு ஈடாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வரவேற்க தக்கது என ஆதரவு கிளம்பியுள்ளது.
June 30, 2025 7:55 AM IST
பெட்ரோல் டேங்க் மீது படுத்து கொண்டே லூட்டி.. ஓடும் பைக்கில் காதல் ஜோடி அட்டூழியம் – வைரலாகும் வீடியோ

