ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது.
இதற்கிடையே ராமதாஸ் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பிடிக்கவில்லை என்றும் கூறி, திருமாவைப் பாராட்டியும் பேசியிருந்தார். இதற்காக விசிக எம்பி ரவிக்குமார், ராமதாஸ்-க்கு நன்றி கூறி இருந்தார்.

திருமாவும் இதுகுறித்து விகடனுக்கு அளித்த பேட்டியில், “ஆரம்ப காலகட்டத்திலிருந்தே ராமதாஸ் அவர்கள் என் மீது பாசம் கொண்டவர்தான். என் மீதான அவரது அக்கறை உண்மையானதுதான்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திடீரென தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தார். இது கூட்டணி பற்றிய சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.
மேலும், பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், சௌமியா அன்புமணியும் தன்னிடம் கெஞ்சியதாக ராமதாஸ் கூறியது இன்னும் இந்தச் சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறது.
