இந்தியாவின் “Secretary of the Research and Analysis Wing’ என்றழைக்கப்படும் ‘RAW’ உளவு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் இந்த மாதம் ஜூலை 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து இதன் தலைவராக பராக் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1989‑ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் (IPS) பஞ்சாப் கேடரில் பணியாற்றியவர்.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் – இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்.

கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்தியாவின் நுண்ணறிவுச் செயலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றியவர். குறிப்பாக கனடாவில் சில முக்கியமான அமைப்புகளை ரகசியமாகக் கண்காணித்தவர்.
