Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஸ்கூட்டியில் தனியாக சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செய்த துணிகர செயல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2025
in அரசியல் செய்திகள்
0
ஸ்கூட்டியில் தனியாக சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செய்த துணிகர செயல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 28, 2025 5:22 PM IST

கர்நாடகா கோலாரில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை துரத்தி செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிசிடிவியில் பதிவான கொள்ளையர்கள்சிசிடிவியில் பதிவான கொள்ளையர்கள்
சிசிடிவியில் பதிவான கொள்ளையர்கள்

கர்நாடகாவில் பட்டப்பகலில் தனியாக சென்ற பெண்ணை தாக்கி, செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள முளபாகிலு நகரில் பெண் ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரின் பின்னால் இளைஞர்கள் இருவர் பைக்கில் பின்தொடர்ந்துள்ளனர். அதைக் கண்டதும் உள்ளுக்குள் அச்சம் கொண்ட பெண், சற்று வேகமாக சென்று ஓரிடத்தில் நின்றுள்ளார். விடாமல் துரத்தி வந்த இளைஞர்களில் ஒருவர், பைக்கில் இருந்து இறங்கி அந்த பெண்ணை நெருங்கி சென்றுள்ளார்.

அவர்களின் திட்டத்தை உணர்ந்த பெண், தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். இருப்பினும் அந்த பெண்ணை துரத்திச் சென்ற கொள்ளையன், அவரை கீழே தள்ளி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றுள்ளார். அப்போது, கடுமையாக போராடிய பெண், சத்தம் போட்டு கூச்சல் எழுப்பியுள்ளார். அதில், பீதியடைந்த கொள்ளையர்கள், அந்த பெண் அணிருந்திருந்த கவரிங் செயினை மட்டும் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியானது. அது போலீசாரின் கண்களில் பட்டதும், சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: தோழிகளுடன் 13 வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. அடுத்த நொடி நடந்த சோகம்..!

மேலும், பாதிக்கப்பட்ட பெண், நங்கலி காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஒருவரின் மனைவி என்பது தெரியவந்துள்ளது. செயின் பறிப்பு சம்பவம் வெளியே தெரிந்ததால் கவுர பிரச்சினை என கருதி அவர்கள் புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 28, 2025 5:22 PM IST



.

Previous Post

இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

Next Post

அறிமுகப் போட்டியில் அரைசதம், சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அறிமுகப் போட்டியில் அரைசதம், சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!

அறிமுகப் போட்டியில் அரைசதம், சதம் விளாசிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In