“என்னுடன் இருப்பவர்களுக்குத்தான் சீட் என்பதன் மூலம் அன்புமணிக்கு நெருக்கடி தருகிறீர்களா?”
“நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. என்னுடன் இருப்பவர்கள் கிளை செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், பேரூராட்சி, நகரம் என படிப்படியாக வளர்ந்து வந்தவர்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். கட்சி பொறுப்போடு தேர்தல் வரும் பொழுது சட்டமன்ற உறுப்பினர் என வாய்ப்புகள் கொடுப்போம். கூட்டணி ஆட்சி மூலம் அவர்களுக்கு அமைச்சர் ஆவதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. “
“திருமாவளவன் என் அன்புக்குரியவர் என்று கூறியிருந்தீர்கள்… பதிலுக்கு அவரும் உங்களுடன் பயணித்த அனுபவங்களை பகிர்வதுடன், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, “சாதி மறுப்பு திருமணங்களுக்கு திருமாவளவன்தான் காரணம், ‘நாடகக் காதல்’ என்றெல்லாம் நீங்கள் பாதை மாறியதை இன்னும் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றுகூறியிருக்கிறார். இப்போதும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா?”
“சிறுவயதில் பெண் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தெரியாது. பெற்று வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து 23 வயது வரைக்கும் காத்திருக்காத பெண்களுக்கு இரண்டு மாதங்கள் பின்னே சுற்றுகின்றவர்கள் மீது காதல் வந்து விடுகிறது. அதனை யாரும் தடுக்க முடியாது. மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் 23 வயது பிறகு தான் அவர்களுக்கு சரியான வயது. நாங்கள் சொல்லி வந்தது தான் பெங்களூரு நீதி மன்றமும் தீர்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அப்போது தான் கர்ப்பம் தரித்தல் உள்ளிட்டவை எல்லாம் 23 வயதிற்கு மேல் தான் சரியாக இருக்கும். அதனை நாங்கள் கூறி வந்தோம். அதனை தான் பெங்களூரு நீதி மன்றமும் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனை நான் பல மேடைகளில் படித்துக் காட்டியுள்ளேன். “
முழுப்பேட்டியை காண…
