Last Updated:
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்கப்பட்டதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கடந்த 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணத்தை அறிய, கருப்புப் பெட்டியை தேடும் பணியை விமான விபத்து விசாரணை முகமை மேற்கொண்டது.
விமானம் விழுந்த மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டடத்தின் மேற்கூரையிலிருந்து ஒரு கருப்புப் பெட்டியும், இடிபாடுகளிலிருந்து மற்றொரு கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், கருப்புப் பெட்டியில் இருக்கும் தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
வெற்றிகரமாக மீட்கப்பட்டு விசாரணை ஆணையத்தில் தரவுகள் வெற்றிகரமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டதுடன் தரவுகள் குறித்து பகுப்பாய்வும் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகளுக்கு இடையேயான உரையாடல் பதிவுக் கருவி CVR மற்றும் விமானத்தின் தரவுகள் பதிவுக் கருவி FDR ஆகியவற்றின் தரவுகள் மீட்கப்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ahmedabad,Gujarat
June 26, 2025 4:00 PM IST
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் மீட்பு… அடுத்த கட்டம் என்ன?

