ஆனால், இந்த ரயிலின் பெட்டிகளில் கன்னடம், ஹிந்து மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக தொலைவு பயணிக்கும் ரயிலில், தமிழ் மொழி பலகை இல்லாததால் தமிழை புறக்கணிப்பு செய்வதாக குற்றம்சாட்டி கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் – எர்ணாகுளம் ரயில் இன்று பிற்பகல கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயில் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
அவர்களை தடுத்த காவல்துறையினர் 20 -க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும், திட்டமிட்டு தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் பாஜக அரசு புறக்கணிப்பதாக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் கோவை ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
