Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈரானின் அணுசக்தித் திட்டம்… ஏன் இந்த எதிர்ப்பு?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 25, 2025
in அரசியல் செய்திகள்
0
ஈரானின் அணுசக்தித் திட்டம்… ஏன் இந்த எதிர்ப்பு?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஈரானும் தனது அணு சக்தித் திட்டத்தினை யுரேனியச் செறிவூட்டல் என்ற நிலைக்குக் கொண்டு போக ஆரம்பித்தது.   பொதுவாக யுரேனியச் செறிவூட்டல் , சிவில் அணு மின் சக்திக்கும் அவசியம்.  ஆனால் சிவில் திட்டங்களுக்கு யுரேனியம் 3.67% அளவுக்கு செறிவூட்டப்பட்டால் போதும்.  

அதற்கு மேலும் கூட இரண்டு நிலைகள் உண்டு.  யுரேனியத்தை 20% செறிவூட்டினால் அதை அணு ஆராய்ச்சி வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். 

அதைத் தாண்டி 90% வரை செறிவூட்டினால்தான் , அணு குண்டு தயாரிக்க அதைப் பயன்படுத்த முடியும். 

ஈரானின் இந்த விஸ்தரிக்கப்பட்ட திட்டம் 1990களின் இறுதிவரையில் கூட ஆயுதத் தயாரிப்புக்க்கு தேவையான அளவை எட்டவில்லை. 

அணு ஆயுதப் பரிசோதனை | Nuclear bomb test

அணு ஆயுதப் பரிசோதனை | Nuclear bomb test

ஆனால் அந்த நிலையில் ஈரானிய அரசின்  (பாரீசிலிருந்து இயங்கிய)  எதிர்க் கட்சிக் குழு ஒன்று  கசியவிட்ட தகவலை அடுத்து ஈரானின் அணு சக்தித் திட்டம் கண்ட முன்னேற்றம் வெளியே வந்து அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அச்சம் கொள்ளச் செய்தது

இஸ்ரேலின் தொடர் வற்புறுத்தலால்,  அமெரிக்க அதிபர்கள்  ஜார்ஜ் புஷ்,   ஒபாமா ஆகியோரும் ஈரான் தனது அணு சக்தித் திட்டத்தைக் கைவிடவேண்டும், அது அணு ஆயுத வல்லமை பெறக்கூடாது என்ற கொள்கையை எடுத்தனர். 

இதற்கான தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் அழுத்தங்களை அடுத்து 2015-ம் ஆண்டு ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் , அமெரிக்கா மற்றும் பிற 4 வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானை அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட வைத்தன.  

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்,  ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில்லை என்று ஒப்புக்கொண்டது. தனது அணு உலைகள் அனைத்தையும் சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் ( IAEA) கண்காணிப்பாளர்களின் பரிசோதனைக்கு அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டது. 

யுரேனியச் செறிவூட்டலை சிவில் அணு சக்தி உற்பத்திக்குத் தேவையான 3.67% அளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளவும் ஈரான் சம்மதித்தது. 

இதற்கு மாற்றீடாக,  ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட அமெரிக்காவும் மற்ற நாடுகளும் ஒப்புக்கொண்டன. 



.

Previous Post

ராகுல் சரமாரி குற்றச்சாட்டு… விவாதிக்க அழைப்பு விடுத்துள்ள தேர்தல் ஆணையம்

Next Post

ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

ஏன் இவ்வளவு இந்திய மாணவர்கள் ஈரானுக்குப் படிக்கச் செல்கிறார்கள்? ஆச்சரியம் தரும் காரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In