Last Updated:
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த வழியாக நாட்டுக்குள் ஊடுருவினார்கள் என்ற முக்கிய தகவலை பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். பூன்ச் பகுதியில் உள்ள தேரா கி காளி என்ற இடத்தின் வழியாக தீவிரவாதிகள் 2022ம் ஆண்டின் இறுதி அல்லது 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஊடுருவி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஜம்மு பகுதியில் இயங்கி வந்த நிலையில், இந்திய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு, 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் காஷ்மீருக்கு சென்றது தெரியவந்துள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி இந்த தீவிரவாதிகள் பூன்ச்சில் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல் இவர்கள் 2024ம் ஆண்டு மே மாதத்தில் சனாய் பகுதியில் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2024 ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அவர்கள் காஷ்மீருக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் பட்காம் பகுதிக்கு வந்ததும் இருபிரிவுகளாக பிரிந்து குல்மார்க், மற்றும் சோன்மார்க் பகுதிக்கு தீவிரவாதிகள் சென்றதும் தெரியவந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து சிறு சிறு தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்காக மீண்டும் ஒன்றிணைந்த விவரம் வெளியாகியுள்ளது.
Jammu and Kashmir
June 23, 2025 3:30 PM IST
பஹல்காம் தாக்குதல் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்… இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைந்தது இப்படிதான்!

