2024-25 நிதியாண்டிற்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது.
அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறையால் 2024-25-ம் ஆண்டுக்கான டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதுகள் வழங்கும் விழா, தில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமிருந்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான என்.காமகோடி டிஜிட்டல் பேமன்ட்ஸ் விருதினைப் பெற்றார்.
தனியார் துறை வங்கிகளில் 2வது இடத்திற்கான விருதை சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. இந்தியாவின் பழமையான தனியார் துறை வங்கியான சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 1904ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ்வங்கி, தமிழ்நாட்டில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மேலும், இந்த வங்கி தேசத்திற்கு 120 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ளது.
