Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருடச் சென்ற ஹோட்டலில் ஆம்லெட், பீப் கறியை ருசித்த திருடன் கைது… ஒரே ஒரு தடயத்தால் சிக்கியது எப்படி?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 20, 2025
in அரசியல் செய்திகள்
0
திருடச் சென்ற ஹோட்டலில் ஆம்லெட், பீப் கறியை ருசித்த திருடன் கைது… ஒரே ஒரு தடயத்தால் சிக்கியது எப்படி?
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 19, 2025 9:04 PM IST

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஹோட்டலில் திருட வந்த அனிஷ், முதலில் ஆம்லெட், பீஃப் கறி சாப்பிட்டு, 25 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றார்.

கைதானவர்கைதானவர்
கைதானவர்

கேரள மாநிலத்தில் ஹோட்டலுக்கு திருட சென்ற திருடன் சுடச் சுட ஆம்ப்லெட் பீஃப் கறி சாப்பிட்டு விட்டு சொகுசாக பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சந்திர நகர் பகுதியில் அந்த ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலை வெகு நாட்களாக நோட்டம் விட்டு வந்த திருடர் சம்பவத்தன்று இரவு களத்தில் இறங்கியிருக்கிறார். திருடத்தான் வந்திருக்கிறோம் என்ற அச்சமோ, பதற்றமோ சிறிதும் இல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற திருடர் முதலில் சாப்பிட்டு விட்டு திருடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

அங்கிருந்த முட்டைகளை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பீப் கறி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந் திருடர் அதை வேக வைத்து ஒரு வெட்டு வெட்டியிருக்கிறார். அதன் பின்னர் நிதானமாக ஹோட்டலை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், மறுநாள் ஹோட்டலுக்கு வந்த ஊழியர்கள் பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளி யார் என்கிற அடையாம் தெரியவந்தது முதல்கட்ட விசாரணையில் ஊர் ஊராக சென்று கைவரிசை காட்டி வரும் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ரப்பாயி அனிஷ் என்கிற சிவகுமார் என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருடித் திருடி பயத்தை தொலைத்த அனிஷ் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைக்கு மேல் இருந்த சிசிடிவியை கவனிக்காத திருடன் போலீசாரிடம் தொக்காக சிக்கியது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 19, 2025 9:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

திருடச் சென்ற ஹோட்டலில் ஆம்லெட், பீப் கறியை ருசித்த திருடன் கைது… ஒரே ஒரு தடயத்தால் சிக்கியது எப்படி?



.

Previous Post

LA Lakers: ரூ.86,000 கோடிக்கு விலைபோன கூடை பந்து அணி – முடிவடையும் 46 ஆண்டு லெகஸி!

Next Post

டேபிள் நிறைய டேட்டாக்கள்…மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டேபிள் நிறைய டேட்டாக்கள்…மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains

டேபிள் நிறைய டேட்டாக்கள்...மந்திரிகளால் ஷாக்கான Stalin! | Elangovan Explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In