ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, சீனா மற்றும் ரஷியா அதிபர்கள் இருவரும் தொலைபேசியில் விவாதித்தனர். சீனா, ரஷியா ஆகிய இரு நாடுகளும் ஈரானுக்கு நெருங்கிய நட்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரின் உரையாடலில் சீன அதிபர் ஸி ஜின்பிங் பேசுகையில், பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேற்கு ஆசியாவில் மோதலைத் தீர்க்க, முன்னுரிமையான அவசர நடவடிக்கையாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
