Last Updated:
“இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
ஆங்கிலத்தில் பேசினால் அவமானம் என்று கருதும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஸ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, இந்திய மொழிகள் நம் கலாசாரத்தின் ரத்தினங்கள் என்றார்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, “இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அப்படியான சமூகம் உருவாகுவது வெகு தொலைவில் இல்லை. மன உறுதி உள்ளவர்களால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன்.
நமது நாட்டை, நமது கலாச்சாரத்தை, நமது வரலாற்றை, நமது மதத்தைப் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.
மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம். அதன் மூலம், உலகையும் வழிநடத்துவோம்” எனத் தெரிவித்தார்.
June 19, 2025 5:24 PM IST
“ஆங்கிலத்தில் பேசினால் அவமானம்…” – இந்திய மொழிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

