Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் விரைவில் வரும் என அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

“நான் சொல்வதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு சமூகம், ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும். அவர்கள்தான் இந்த நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறார்கள்.

இந்திய நாட்டின் மொழிகள் நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள். மொழிகள் இல்லாமல் நாம் உண்மையான இந்தியர்கள் அல்ல.

ஒரு அந்நிய நாட்டு மொழியில் நமது வரலாறு, கலாசாரம், மதத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. முழுமையற்ற அந்நிய நாட்டு மொழிகளால் ஒரு முழுமையான இந்தியாவை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.

போர் எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இந்திய சமூகம் இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறும் என எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நமது மொழிகளில் பெருமையுடன் நாம் இந்த நாட்டை வழிநடத்துவோம், சித்தாந்தப்படுத்துவோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், இந்த உலகை ஆள்வோம். இதுபற்றி யாரும் சந்தேகப்படத் தேவையில்லை.

2047ல் உலக வளர்ச்சியின் உச்சத்தில் இந்தியா இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்” என்று பேசியுள்ளார்..

Previous Post

`ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு’ -உசுப்பேற்றிய பாக்., ராணுவ தளபதிக்கு வெள்ளை மாளிகையில் விருந்து

Next Post

’ஆண்டுக்கு 3000 சுங்க கட்டணத்தை 1500 ஆக குறைக்க வேண்டும்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’ஆண்டுக்கு 3000 சுங்க கட்டணத்தை 1500 ஆக குறைக்க வேண்டும்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

’ஆண்டுக்கு 3000 சுங்க கட்டணத்தை 1500 ஆக குறைக்க வேண்டும்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In