Last Updated:
மகாராஷ்டிராவில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியாக இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது.
கடும் சர்ச்சை எழுந்த நிலையில் மகாராஷ்டிரா தொடக்கப் பள்ளிகளில் இந்தி மூன்றாவது கட்டாய மொழியில் இருந்து விருப்ப மொழியாக மாற்றப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக மாற்ற முயற்சி நடந்தது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்தி கட்டாய பாடம் என்ற அறிவிப்பை திருத்தியுள்ள மாநில கல்வி வாரியம், புதிய சுற்றறிக்கையை அளித்துள்ளது.
அதன்படி இந்தி இனி மகாராஷ்டிராவில் கட்டாயமான மூன்றாவது மொழியாக இருக்காது. மாணவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு இந்திய மொழி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஒரு வகுப்பில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தி இல்லாமல் வேறு மொழி கற்க விரும்பினால் அந்த வகுப்புக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், 20க்கும் குறைவான மாணவர்கள் ஒரு மொழியை தேர்வு செய்தால் அவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
June 18, 2025 3:10 PM IST

