எவ்வளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?: இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, பேரிடர் நடந்த இடத்தின் இடிபாடுகளில் இருந்து ஏராளமான தங்கம், பணம் மற்றும் சில ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 800 கிராமுக்கு அதிகமான தங்க ஆபரணங்கள், 80,000 ரூபாய் ரொக்கம், பாஸ்போர்ட்கள் மற்றும் பகவத் கீதையின் நகல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

