இயக்குநர் வெற்றி மாறனின் திடீர் முடிவு தனுஷுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் நடிகர்கள் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்திருக்கிறது. முக்கியமாக, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் – நடிகர் ரஜினிகாந்த்; ஏ. ஆர். முருகதாஸ் – விஜய் உள்ளிட்ட கூட்டணிகள் பெரிதாக கவனிக்கப்பட்டவை.
அந்த வரிசையில், இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெற்றி மாறன் – தனுஷ்.
பொல்லாதவன் படத்தில் இணைந்த வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி தொடர்ந்து ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெற்றிப்படங்களாக கொடுத்து ஆச்சரியப்படுத்தினர்.