Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அகமதாபாத் விமான விபத்துக்கு இதுதான் காரணமா? – பயணி பகிர்ந்த பகீர் வீடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2025
in அரசியல் செய்திகள்
0
அகமதாபாத் விமான விபத்துக்கு இதுதான் காரணமா? – பயணி பகிர்ந்த பகீர் வீடியோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 12, 2025 8:16 PM IST

அகமதாபாத் விமான விபத்துக்கு 2 மணிநேரம் முன்பு பயணி ஆகாஷ் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 204 பேர் உயிரிழந்த விபத்துக்கு விமான சேவைகளின் குறைபாடுகள் காரணமா என கேள்வி எழுந்துள்ளது.

Air India PlaneAir India Plane
Air India Plane

அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்குவதற்கு 2 மணிநேரம் முன்பு பயணி எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 12 பணியாளர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 10 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அகமதாபாத்தில் இருந்து விமானம் லண்டனுக்கு மதியம் 1.39 விமானம் புறப்பட்ட நிலையில், 10 நிமிடங்களில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் தீ பற்றிக் கரும்புகை வெளியானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் இதுவரை 204 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இதனிடையே இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் விபத்துக்கு முன்னதாக பயணித்த நபர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக டெல்லியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அகமதாபாத் வந்துள்ளது. அப்போதெல்லாம் விமானம் எவ்விதப் பிரச்சினையும் இன்றி செயல்பட்டுள்ளது. ஆகாஷ் என்பவர் டெல்லியில் விமானத்தில் ஏறி சுமார் 2 மணி நேரம் பயணித்து அகமதாபாத் வந்துள்ளார். அப்போது விமானத்தில் பயணிகளின் இருக்கையில் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சி சரியாகச் செயல்படவில்லை என்பதைக் கண்டறிந்தார்.

மேலும் விமானத்தில் பணியாளர்களை அழைப்பதற்கென்று வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகளும் சரியாகச் செயல்படவில்லை. அதேபோல் ஏசி-யும் சரியாகச் செயல்படவில்லை. இவ்வளவு பெரிய விமான நிறுவனம் தனது சேவைகளை இப்படி வழங்குகிறதே என ஆத்திரம் அடைந்த அவர் அவற்றைத் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோக்களை வைத்து ஆகாஷ் ஏர் இந்தியா நிறுவனத்திடம் முறையிடலாம் என நினைத்திருக்கிறார்.

ஆகாஷ் அகமதாபாத்தில் இறங்கிய பின்னர் விமானம் லண்டன் நோக்கிக் கிளம்பியது. அப்போதுதான் விபத்தில் சிக்கியது. இதையடுத்து, விமானத்தில் தான் எடுத்த வீடியோக்களையும் ஆகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Ahmedabad (Ahmedabad) [Ahmedabad],Ahmedabad,Gujarat

First Published :

June 12, 2025 8:13 PM IST



.

Previous Post

திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

Next Post

ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை…

ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In