Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது பாகிஸ்தான் தொடுத்த 2 லட்சம் சைபர் தாக்குதல்களை முறியடித்த இந்தியா! 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 15, 2025
in அரசியல் செய்திகள்
0
ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது பாகிஸ்தான் தொடுத்த 2 லட்சம் சைபர் தாக்குதல்களை முறியடித்த இந்தியா! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது என்ன நடந்தது என்பதை நாம் அனைவருமே பார்த்தோம். நம்முடைய மின் உள்கட்டமைப்பு குறிவைக்கப்பட்டது. சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்கள் பாகிஸ்தானால் தொடுக்கப்பட்டன. ஆனால் நாங்கள் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்தோம்,” என்று மத்திய மின்துறை அமைச்சர் கட்டார் கூறினார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததை அடுத்து, சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மே 7 அன்று, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில் பாகிஸ்தானும் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மூலம் இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தது. ஆனால் அவை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்று நாட்கள் வரை நீடித்தஇந்த மோதல், மே 10 அன்று போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை பாகிஸ்தானின் இராணுவ நிறுவல்கள் மற்றும் விமான தளங்களுக்கு பெரும் சேதத்தை இந்தியா ஏற்படுத்தியது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், இந்த நடவடிக்கையின் தாக்கத்தை பாகிஸ்தான் கூடிய விரைவில் உணரும் என்றார். ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக செனாப் மற்றும் ஜீலம் நதிகளில் இந்தியாவின் வலுவான நீர்மின் ஆற்றலை அவர் குறிப்பிட்டதோடு, அரசாங்கம் இப்பகுதியில் புதிய நீர்மின் திட்டங்களை அமைக்க தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

1960-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கும் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT), பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய நீர்மின் திட்டங்கள் அமைக்க பாகிஸ்தான் ஆட்சேபனைகள் தெரிவிப்பது குறித்து அமைச்சரிடம் கேட்டபோது, “பாகிஸ்தான் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாங்கள் ஏற்கனவே அவற்றுக்கெல்லாம் பதிலளித்துள்ளோம். முன்னதாக, அவர்களின் ஆட்சேபனைகள் காரணமாக நாங்கள் வுல்லார் திட்டத்தை கைவிட்டோம். இப்போது, ​​அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி விரைவில் விரிவான திட்ட அறிக்கையை (DPR) வெளியிட உள்ளோம்” என்றார்.

தேசிய பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்த கட்டார், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டதற்காக ஜம்மு-காஷ்மீர் மக்களைப் பாராட்டுவதாகவும் கூறினார்.

370-வது பிரிவு நீண்ட காலமாக இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஒரு தடையாக இருந்து வந்ததாகவும், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவர கடுமையாக உழைத்து வரும் பிரதமர் மோடிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 15, 2025 7:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஆபரேஷன் சிந்தூர் நடந்த போது பாகிஸ்தான் தொடுத்த 2 லட்சம் சைபர் தாக்குதல்களை முறியடித்த இந்தியா! 



.

Previous Post

அமெரிக்க ராணுவத்தின் ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் தலைமை தளபதிக்கு அழைப்பு?

Next Post

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி! -சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In