அரசு மருத்துவமனை மருத்துவர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் 11ஏ இருக்கையில் இருந்த ரமேஷ் விஸ்வாஷ் குமார், அவசர வெளியேறும் வாயில் அருகே இருந்ததால் அங்கிருந்து குதித்தார். 40 வயதான அவர், தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்றும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினரைப் பார்த்துவிட்டு தனது சகோதரருடன் பிரிட்டனுக்கு பயணம் செய்ததாகவும் ஊடகங்களிடம் கூறினார்.
