இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை. இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீஸைச் சேர்ந்த 7 பேர், 2 விமானிகள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது.

