Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Ahmedabad Plane Crash: விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு – டாடா குழுமம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2025
in அரசியல் செய்திகள்
0
Ahmedabad Plane Crash: விமான விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு – டாடா குழுமம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 13, 2025 8:36 AM IST

Ahmedabad Plane Crash: ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தனது தொழில் வாழ்க்கையில் மிக மோசமான நாள் என்று டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

Plane CrashPlane Crash
Plane Crash

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான பிறகு, தீ மிக வேகமாகப் பரவியதால் பயணிகள் யாரையும் காப்பாற்ற முடியவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார். விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய விமானம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை தேசிய பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

அமித் ஷா நேரில் ஆறுதல்

விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானம் மூலம் டெல்லியில் இருந்து குஜராத் சென்றார். விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற அமித் ஷா விமானத்தின் நொறுங்கிய பாகங்களைப் பார்வையிட்டார். சேதமடைந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்திலும் ஆய்வு செய்தார். பின்னர் விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, நினைத்துப் பார்க்க முடியாத இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று கூறினார். டி.என்.ஏ. மாதிரி பரிசோதனைக்குப் பின்னரே இறந்த அனைத்து பயணிகளையும் முறையாக அடையாளம் காண முடியும் என்று தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

“தொழில் வாழ்க்கையில் மிக மோசமான நாள்”

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தனது தொழில் வாழ்க்கையில் மிக மோசமான நாள் என்று வேதனை தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் மருத்துவச் செலவை ஏற்பதாகவும், விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் எனவும் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இன்று ஆய்வு

விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், ஐ.நா. தலைவர் அண்டோனியா குட்டரெஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமான விபத்தை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் செல்கிறார். அப்போது, விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 13, 2025 8:12 AM IST



.

Previous Post

தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

Next Post

மேட்டூா் அணை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூா் அணை நிலவரம்!

மேட்டூா் அணை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In