Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Air India Flight Crash | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது எப்படி? – வெளியான அதிர்ச்சி தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2025
in அரசியல் செய்திகள்
0
Air India Flight Crash | அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது எப்படி? – வெளியான அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 12, 2025 7:51 PM IST

விமானம் விழுந்து நொறுங்கிய நேரடிக் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், அதிர்ச்சி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி என்ன?

அகமதாபாத் விமான விபத்துஅகமதாபாத் விமான விபத்து
அகமதாபாத் விமான விபத்து

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு 242 பேருடன் கிளம்பிய ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது. இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்குப் புறப்பட இருந்தது. விமானத்தில் 230 பயணிகள், 10 கேபின் பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என 242 பேர் மொத்தமாக இருந்தனர்.

விமானம் மதியம் 1.38 மணியளவில் விமான நிலைய ஓடுதளத்திலிருந்து கிளம்பியது. விமானம் கேப்டன் சுமீத் சபர்வால் தலைமையில் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் முன்னிலையில் விமானம் சீராக ஓடுதளத்தில் ஓடியது.

வழக்கம் போல் எவ்வித இடையூறுமின்றி டேக் ஆஃப் ஆன விமானம் புறப்பட்ட 5-ஆவது நிமிடத்தில் தடுமாற ஆரம்பித்தது. சுமார் 825-வது அடியை எட்டிய போது விமானம் அதற்கு மேல் செல்ல முடியாமல் திணறியது. ஆபத்தை உணர்ந்த கேப்டன் சுமீத் சபர்வால் ஆபத்துக் காலத்தில் விடுக்கப்படும் ‘மே டே’ சமிஞ்ஞையை விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு 3 முறை அறிவித்தார். ஆனால் அதற்குள் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையிறங்க ஆரம்பித்தது.

விமான நிலையத்திலிருந்து சற்றுத் தூரத்தில் உள்ள மேகனி நகர் பகுதியில் விமானம் விழுந்து சம்பவ இடத்திலேயே வெடித்துச் சிதறியது. விண்ணை நோக்கித் தீப்பிழம்புகள் எழுந்த நிலையில், அடர்த்தியான கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவியது.

சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திற்குள் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அப்பகுதிக்கு விரைந்தன. அப்பகுதி மக்களும் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டாலும் ஒரு சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விமானத்தில் இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுகல் நாட்டவர்கள் மற்றும் கனடா நாட்டவர் ஒருவர் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

186 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 13,500 கிலோமீட்டர் தூரம் நிற்காமல் பறக்கக் கூடிய திறன் பெற்றது. மணிக்கு 945 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்தப் பயணிகள் விமானம் சுமார் 227 டன் எடை கொண்டது.

விமானம் விழுந்த வேகத்தில் அத்தனை எரிபொருளும் சேர்ந்து அதன் பெரு வெடிப்புக்குக் காரணமாக அமைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. விமானத்தில் உள்ள கருப்புப் பெட்டியை மீட்டு ஆய்வு செய்த பின், விபத்துக்கான காரணம் என்ன என்பது விரைவில் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Ahmedabad,Gujarat

First Published :

June 12, 2025 5:52 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Air India Flight Crash | நாட்டையே உலுக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து : முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பது என்ன?



.

Previous Post

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத காஞ்சிபுரம் மாநகராட்சி.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

Next Post

அகமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் ஆழ்ந்த வருத்தம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அகமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் ஆழ்ந்த வருத்தம்

அகமதாபாத் விமான விபத்து: ஏர் இந்தியா தலைவர் என்.சந்திரசேகரன் ஆழ்ந்த வருத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In