Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியாவில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச பயணம் வழங்கும் ரயில்.. எங்கே ஓடுகிறது தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2025
in அரசியல் செய்திகள்
0
இந்தியாவில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச பயணம் வழங்கும் ரயில்.. எங்கே ஓடுகிறது தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 11, 2025 4:17 PM IST

அமெரிக்காவில் உருவான டீசல் என்ஜின், இந்த ரயிலுக்கு 400 குதிரைத் திறன் சக்தியை வழங்கி, என்ஜினை இழுத்துச் செல்கிறது.

இலவச பயணம் வழங்கும் ரயில்இலவச பயணம் வழங்கும் ரயில்
இலவச பயணம் வழங்கும் ரயில்

இந்தியாவில் இயக்கப்படும் ரயில்களில் ஒன்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகளிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் இயங்கி வருகிறது. இந்த ரயில் குறித்த பின்னணி தகவல்கள் சுவாரஸ்யம் அளித்து வருகின்றன.

இந்தியாவில் போக்குவரத்து துறையைப் பொறுத்த அளவில் மிகப்பெரிய நெட்வொர்க்காக இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் மட்டுமின்றி, வர்த்தகர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பயனடைகிறார்கள்.

ரயில்வே துறையைப் பொறுத்த அளவில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. அந்த வகையில், கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ரயிலில் டிக்கெட் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. ஒரு ரூபாய் கூட பயணிகளிடம் கட்டணத்தைப் பெறாமல் அந்த ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அது இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் இயங்கும் பக்ரா நங்கல் ரயில் ஆகும். இந்த ரயில் மட்டுமே இந்தியாவில் இலவச பயணத்தை 75 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறது. இந்த ரயில் முன்பு பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டபோது, அதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்குப் பயன்பட்டது.

இந்த அணையின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் வழியாக பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மின்சாரத்தைப் பெறுகின்றன. குறிப்பாக, 5 மாநிலங்களுக்கு இந்த பக்ரா நங்கல் அணை மூலமாகப் பெறப்படும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் கட்டணமின்றி இலவசமாக இயக்கப்படுகிறது.

நங்கலில் இருந்து காலை 7.05க்கும், மதியம் 3.05க்கும் இந்த ரயில் புறப்பட்டுச் செல்கிறது. 27.3 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் 30 நிமிடத்தில் கடந்து செல்லும். மலைத்தொடர் வழியே இந்த ரயில் செல்வது கண்களுக்கு விருந்தளிப்பதாக இருக்கும்.

நாள் ஒன்றுக்கு உள்ளூர் வாசிகள், பள்ளிக் குழந்தைகள் என அதிகபட்சம் 120 பேர் வரை இந்த ரயிலை அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். முழுக்க முழுக்க மரப் பட்டிகளால் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

அமெரிக்காவில் உருவான டீசல் என்ஜின், இந்த ரயிலுக்கு 400 குதிரைத் திறன் சக்தியை வழங்கி, என்ஜினை இழுத்துச் செல்கிறது.

First Published :

June 11, 2025 4:17 PM IST



.

Previous Post

காத்திருப்பு ரயில் டிக்கெட் நிலவரம்: 24 மணி நேரத்துக்கு முன்பே அறிவிப்பு- சோதனை முறையில் திட்டம் அறிமுகம்

Next Post

ராகுலை கடுமையாக விமா்சித்த திக்விஜய் சிங்கின் சகோதரா் நீக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுலை கடுமையாக விமா்சித்த
திக்விஜய் சிங்கின் சகோதரா் நீக்கம்

ராகுலை கடுமையாக விமா்சித்த திக்விஜய் சிங்கின் சகோதரா் நீக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In