Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொலை செய்ய ரூ.20 லட்சம்… லைவ் லொக்கேஷன்… சோனம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2025
in அரசியல் செய்திகள்
0
கொலை செய்ய ரூ.20 லட்சம்… லைவ் லொக்கேஷன்… சோனம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:June 11, 2025 1:08 PM IST

மேகாலயாவில் தேனிலவு சென்ற கணவனை கொலை செய்ய 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாக மனைவி சோனம் தெரிவித்துள்ளார்.

சோனம் ரகுவன்ஷிசோனம் ரகுவன்ஷி
சோனம் ரகுவன்ஷி

மேகாலயாவிற்கு தேனிலவு சென்ற போது, கணவரைத் தீர்த்துக் கட்ட, மனைவி 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ஆகியோருக்கு கடந்த மே மாதம் 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த 23 ஆம் தேதி புதுமணத் தம்பதி, மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி மலைப் பகுதிக்கு தேனிலவு சென்றனர்.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும், பள்ளத்தாக்குப் பகுதியில், அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் நந்த்கஞ்ச் பகுதியில் தலைமறைவாக இருந்த மனைவி சோனம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. ஹனிமூன் அழைத்துச் சென்ற கணவனை, தனது காதலன் ராஜ் குஷ்வாஹா உதவியுடன் சோனம் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டியது அம்பலமானது. ராஜ் குஷ்வாஹாவின் நண்பர்கள் 3 பேர் பணத்திற்காக இக்கொலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சோனம் மற்றும் அவரது காதலன் உட்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கணவரைக் கொலை செய்வதற்கு முதலில் 4 லட்சம் ரூபாய் பணம் தருவதற்கு சோனம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் பேரம் அதிகரித்து, கணவரைத் தீர்த்துக் கட்டுவதற்கு 20 லட்சம் ரூபாய் வரை பணம் தருவதற்கு சோனம் ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதில், முன்பணமாக ரூ.15,000 ரூபாயை கொடுத்த சோனம், கொலை செய்த பிறகு முழுப் பணத்தைத் தருவதாக வாக்குறுதி அளித்ததும் தெரியவந்துள்ளது. பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து இணைப்பு விமானம் மூலம் தேனிலவிற்குப் புறப்பட்ட தம்பதிகளை, 3 பேரும் அங்கிருந்தே பின் தொடரத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

தங்களது இருப்பிடத்தை செல்போன் லைவ் லொகேஷன் மூலம் தொடர்ந்து 3 பேருக்கும் சோனம் பகிர்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்த 3 பேரும், முதன் முறை குற்றவாளிகள் என்றும், கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் அல்ல எனவும் கூறப்படுகிறது.

Location :

Indore,Madhya Pradesh

First Published :

June 11, 2025 1:08 PM IST



.

Previous Post

டொனால்ட் டிரம்ப் குறித்த கடந்த வார பதிவுகளுக்கு எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்தார்

Next Post

நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

நீலகிரி, கோவையில் நாளை மிக கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In