கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கெங்கேரி பகுதியைச் சேர்ந்த தம்பதி தசே கவுடா – ஹரிணி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அண்மையில் நடைபெற்ற உள்ளூர் கோவில் விழாவில் 36 வயதான ஹரிணிக்கு, 25 வயதான யசஷ் என்ற இளைஞருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. முதல் அறிமுகத்திலேயே செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இருவரும், பின்னர் மணிக் கணக்கில் உரையாடும் அளவிற்கு நட்பாக பழகியுள்ளனர்.
நாளடைவில் இந்த நட்பு, முறை தவறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி ஜோடியாக ஊர் சுற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த தசே கவுடா, அவரை ரகசியமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளார். அதில், மனைவியின் ரகசிய காதல் அம்பலமானதால், அவரை கண்டித்து, செல்போனையும் பறித்துள்ளார். பின்னர், தனது தவறை உணர்ந்த ஹரிணி, ரகசிய காதலை கைவிட்டு யசஷ் உடன் பேசுவதை, பழகுவதை நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பெங்களூருவில் கெங்கேரி அருகே பூர்ணபிரஜா உள்ள ஓட்டலில், பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். விசாரணையில், அவர் ஹரிணி என்றும், அவருடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கியவர் யசஷ் என்பதும் தெரியவந்து. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கம்ப்யூட்டர் இன்ஜினியரான யசஷ்க்கு, ஹரிணியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருக்கமாக பழகியதும் பலமுறை ஓட்டலில் அறை எடுத்து தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென உறவை முறித்துக் கொண்டதால், ஹரிணி மீது இளைஞர் கடும் கோபத்தில் இருந்துள்ளார். ஒரு வழியாக அவரை தொடர்பு கொண்ட யசஷ், கடைசியாக உன்னை பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
அதை நம்பிய ஹரிணியும், அவர் அழைத்த ஓட்டலுக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு வைத்து தொடர்ந்து தன்னுடன் இருக்க வேண்டும் என்று யசஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர், ஏற்கனவே தயாராக கொண்டு சென்ற கத்தியை எடுத்து ஹரிணியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
17 முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பெண், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அறையை அடைத்துவிட்டு யசஷ் தப்பியோடியுள்ளார். நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்கப்படாததால், ஓட்டல் ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர். அப்போது, ஹரிணி சடலமான கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞர் யசஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகசிய காதலை கைவிட்ட பெண்ணை, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
June 10, 2025 5:04 PM IST
17 முறை கத்தியால் குத்து.. திருமணத்தை மீறிய உறவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. விசாரணையில் திடுக்!
