Last Updated:
மேகலாயாவில் ஹனிமூனிற்கு சென்ற புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், பகீர் திருப்பமாக மனைவியை கணவரை தீர்த்துக்கட்டியது நடுங்க வைத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் விழா கோலாகலமாக முடிய புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு ஹனிமூன் புறப்பட்டனர். மனைவி தான்! உலகம் என நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கி கிடந்த ராஜாவிற்கு அன்று தெரியாமல் போனது, தன்னை கொலை செய்ய போகிறார்கள் என்று.
தலைநகர் ஷில்லாங்கில் ஸ்கூட்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்த சிரபுஞ்சியை சுற்றி பார்க்க உற்சாகத்துடன் கிளம்பினர். ஆசை தீர சுற்றி பார்த்தவர்கள் மே 24 ஆம் தேதி, நோங்கிரியாட் கிராமத்தில் தங்கியிருந்த விடுதியை காலி செய்து விட்டு புறப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் இருவரும் மாயமாகினர். இருவரின் செல்போனுக்கும் அழைத்தபோது தொடர்புகொள்ள முடியாமல் போனதால் 8 நாட்களுக்குப் பின் தம்பதியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் புதுமணத் தம்பதியை நோங்கிரியாட் பள்ளத்தாக்கு முழுவதும் தேடினர்.
அப்போது அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெய்சாடோங்கின் பள்ளத்தாக்கில் 200 அடி ஆழத்தில் இளைஞர் ஒருவரின் உடல் பாதி அழுகிய நிலையில் கிடந்துள்ளது. ஜூன் 2ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்ட 30 வயதான அந்த நபரின் கையில் ராஜா என டாட்டூ குத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் இறந்தவர், புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அவரது மனைவி சோனமின் ஜர்க்கின் மற்றும் சில மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பாரா ? என சந்தேகித்த போது உடற்கூராய்வில் ராஜா கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் மீண்டும் தேடுகையில், புதிதாக வாங்கப்பட்ட அரிவாள் போன்ற ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.
சடலம் கிடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தூரத்தில் அவர்கள் வந்த வாடகை ஸ்கூட்டர் கிடைத்தது. வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், அவரின் மனைவி சோனமை தொடர்ந்து தேடி வந்தனர். தங்கும் விடுதி ஊழியர்கள், வாடகைக்கு பைக் கொடுத்தவர்கள் மற்றும் சுற்றுலா ஏஜென்ட்கள் என ஒருத்தரையும் விடாமல் விசாரித்துள்ளனர். பின்னர் ஓட்டல் சிசிடிவி கேமிரா ஆதாரங்களை வைத்து விசாரித்ததில், சந்தேகத்திற்கு இடமாக தம்பதியை பின் தொடர்ந்து சென்ற 3 பேரை போலீசார் பிடித்தனர்.
பலத்த பாதுகாப்புடன் தீவிரமாக விசாரிக்க பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. பிடிபட்ட 3 பேரில் 2 பேர் இந்தூரை சேர்ந்தவர்கள். ஒருவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர். சோனம்தான், அவரது கணவர் ராஜாவை கொலை செய்ய தங்களை மேகலாவிற்கு வரவழைத்தாக பிடிபட்ட மூவரும் அதிர்ச்சி கொடுத்தனர்., திட்டமிட்ட கொலையில் சோனம் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும், குறித்த நேரத்தில் ராஜாவை தீர்த்துகட்டியதாகவும் பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர். அருவியில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்ததைபோல செட்டப் செய்து வைத்து விட்டு அவர்கள் தப்பித்ததாகவும் கூறியுள்ளனர். பின்னர் மேகலாயாவில் இருந்த தப்பித்த மனைவி சோனம் உத்தரபிரதேசத்தில் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த சோனம், உத்தரப் பிரதேசத்தின் நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கணவரை கொன்றதாக சோனமை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? என தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வழக்கில் சந்தேகம் இருப்பதாகவும் சோனம் ஒரு அப்பாவி என்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்,.
மனைவியே கணவரை கொலை செய்தாரா? ஏன் எதற்கு? உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் நீடிக்க விசாரணையின், முடிவில்தான் ராஜா கொலையில் உள்ள உண்மையான பின்னணி குறித்து தெரியவரும்.
June 10, 2025 10:36 AM IST

