பயிற்சியைத் தொடங்கிய ஹேசில்வுட் பேட்டியில் கூறியதாவது:
2023-இல் இருந்தது போலவே நன்றாக இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளில் என்னுடைய விக்கெட்டுகள் நன்றாகவே இருக்கின்றன.
திறமையின்படி பார்த்தால் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சுக் காலத்தில் இருக்கிறேன். என்னுடைய உடலை மட்டும் பார்த்துக்கொண்டால் போதுமானது.
என்னுடைய ஒரே பிரச்னையாக தீவிரத்தன்மை மட்டும்தான் இருந்தது. தினமும் தொடர்ச்சியாக பயிற்சி எடுத்து வருகிறோம்.
பந்துவீச்சுப் பயிற்சியிலும் செஷன் வாரியாக செய்து வருகிறோம். முடிந்த அளவுக்கு எங்களை சிறந்த நிலையில் வைத்துக்கொள்ள பயிற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
