தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்றது. இப்படி ஆளுநரின் செயல்பாடுகள் விமர்சனத்துக்குள்ளாகும் காலங்களில் அமைதியாக இருப்பார். சில காலத்துக்கு பிறகு மீண்டும் தமிழக அரசை சீண்டுவார். அந்தவகையில் தற்போது தமிழகத்தில் தகுதியற்ற டாக்டர் பட்டங்கள் வழங்கப்படுகிறது எனக்கூறி தமிழக அரசை வம்புக்கு இழுத்திருக்கிறார்.

சென்னை குடிமக்கள் மன்றம் சார்பில் “ஆபரேஷன் சிந்தூர் டிகோட்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரவி, ஏர் மார்ஷல் (ஓய்வு) எம். மாதேஸ்வரன், கர்னல் (ஓய்வு) ஜான் பிரின்ஸ், சிசிஎப்-ன் தலைவர் கே.டி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆபரேஷன் சிந்தூர்
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பயணத்தில் ஒரு திருப்புமுனை தருணம். இது நாட்டின் தேசிய பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது.
