“2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதன்படி, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்யும் தீர்மானங்கள் உட்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்றன.
அதேபோல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி ஆகிய இரண்டு புது அணிகள் உருவாக்கப்பட உள்ளன.

தற்போது தி.மு.க-வில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகிய ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருக்கின்றனர்.
அவர்களோடு ஒன்று அல்லது இரண்டு பேர் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும், தலைமைக்கழகத்தின் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவும் இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடக்கின்றன.
அதன்படி, பொதுக்குழுவிலோ அல்லது பொதுக்குழு முடிந்தபிறகோ தலைமைக்கழகத்தில் சீனியர்களின் பதவி பறிக்கப்படவும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது” என்கின்றனர் விரிவாக.
