Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கள்ளக்குறிச்சி: மாணவிகளை காலணியால் ஆசிரியை தாக்கிய விவகாரம்; அதிரடி உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்! human rights commission order on the case of teacher slapped students in chinna salem

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 30, 2025
in அரசியல் செய்திகள்
0
கள்ளக்குறிச்சி: மாணவிகளை காலணியால் ஆசிரியை தாக்கிய விவகாரம்; அதிரடி உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்! human rights commission order on the case of teacher slapped students in chinna salem
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்குச் சென்று கழிவறையின் கதவினை மூடாமலேயே பயன்படுத்தியுள்ளார். இதனைக் கவனித்த பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகள் கழிவறையின் கதவினை மூடியுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கதவினை திறந்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் “கழிப்பறையின் கதவினை ஏன் மூடினீர்கள்?’ எனக் கேட்டு இரு மாணவிகளையும் அனைவரது முன்னிலையிலும் தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமன்றி, சக மாணவிகள் முன்பாக காலணியால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் அந்த இரண்டு மாணவிகளும் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

2017-ம் ஆண்டு, நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தும், அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இது குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், விழுப்புரம் மாவட்டம் கல்வி உரிமை ஆணையத்திற்கு உட்பட்ட சின்ன சேலம் அரசு பெண்கள் பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதன்படி நேரில் சென்று விசாரணை நடத்திய கல்வி அதிகாரிகள் அளித்த விசாரணை அறிக்கையின்படி ‘இரு மாணவிகளையும் ஆசிரியர் சாந்தி கடுமையான வார்த்தைகளால் திட்டியதும் பின்பு காலணியால் அடித்துத் துன்புறுத்தியதும்’ உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஒரு மாதத்திற்குள் வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்த நான்கு லட்சம் ரூபாயை ஆசிரியர் சாந்தியிடம் இருந்து தமிழக அரசு பெற்றுக் கொள்ளவும், மாணவிகளைத் தாக்கிய சின்ன சேலம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.



.

Previous Post

கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

Next Post

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்.. ஆத்திரத்தில் தந்தை செய்த அதிர்ச்சி செயல்.. என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In