தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது.
கடந்த வாரம், “நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம் எப்படி பொதுவெளியில் வந்தது? என்னுடைய தந்தை கடவுள். அவரைச் சுற்றி பேய்கள் இருக்கின்றன’ என்று சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் கவிதா, தனது தந்தை மற்றும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவரருமான சந்திரசேகர் ராவிற்கு எழுதியிருந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலானது. கவிதா பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மகளிர் பிரிவின் தலைவர் ஆவார்.
இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய கவிதா தனது சகோதர் கே.டி ராமா ராவை நேரடியாக குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது…
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, நான் சிறையில் இருந்தேன். அப்போது, பாஜக உடன் பாரதிய ராஷ்டிரியா சமிதி கட்சியை இணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்கு நான் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தேன்.
காளேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தில் நடந்த முறைக்கேடுகளுக்கு சந்திரசேகர் ராவிற்கு நீதிமன்றம் வழங்கிய நோட்டீஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்னைகளுக்கு கட்சியின் தலைமை அமைதியாகவே இருந்தது. அது ஏன்?
