இந்த நிலையில், மறைந்த நடிகர் ராஜேஷ் பேசிய பழைய நேர்காணல்களைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி ஒரு நேர்காணலில், “மார்க்ஸிய புத்தகங்களைப் படித்துவிட்டு லண்டன் சென்றபோது காரல் மார்க்ஸின் கல்லறைக்குச் சென்றேன். அங்கிருந்து சென்னை திரும்பியதும், எனக்கான கல்லறையைக் கட்டினேன். முதலில் மார்பிள் வைத்து அதை உருவாக்கினோம்.
நீண்ட காலம் கழித்து அதில் பிளவு ஏற்பட்டதால் அதை இடித்துவிட்டு கிரனைட்டில் கட்டினேன். காரணம், மகனுக்கும் மகளுக்கும் எதற்கு சிரமம் கொடுக்க வேண்டும்? எனக்குப் பிடித்ததுபோல் சில பைபிள் வசனங்களுடன் என் கல்லறையைக் கட்டியிருக்கிறேன். இறந்தபின் எப்படி அமைய வேண்டும் என சொல்லவா முடியும்?” எனக் கூறியிருந்தது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.