கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ. 1000 கோடியில் ஒரு படம் எடுப்பதை விட அந்தத்தொகையில், 20 அல்லது 30 படங்களை இயக்குவேன் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
கிரீன் ஸ்கிரீன் படங்கள் எடுப்பதை வெறுப்பதாகவும், உண்மையான கதைக்களத்தில் படம் எடுப்பதையே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் இயக்குவது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளதாவது,
”ஆயிரம் கோடியில் படம் இயக்க வேண்டுமென்றால், அதில் எண்ணற்ற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இடம்பெற வேண்டியுள்ளது. அதனை கிரீன் ஸ்கிரீனில் படம் பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. அதுபோன்று படங்கள் எடுப்பதை வெறுக்கிறேன். உண்மையான கதைக்களத்தில் உண்மையான மனிதர்களுக்கு மத்தியில் உண்மையான படத்தை எடுக்கவே விரும்புகிறேன். அந்த ஆயிரம் கோடியில் 20 அல்லது 30 படங்களை இயக்குவேன்” எனக் குறிப்பிட்டார்.
