Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காஷ்மீரில் கடந்த 57 ஆண்டுகளில் வரலாறு காணாத வெப்பம்… எவ்வளவு தெரியுமா..?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2025
in அரசியல் செய்திகள்
0
காஷ்மீரில் கடந்த 57 ஆண்டுகளில் வரலாறு காணாத வெப்பம்… எவ்வளவு தெரியுமா..?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 26, 2025 9:48 AM IST

ஜம்மு காஷ்மீரில் சமீப நாட்களில் வெப்பநிலை அதிகரித்து, ஸ்ரீநகரில் 34.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி, 57 ஆண்டுகளில் மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக உள்ளது.

கோப்பு படம்கோப்பு படம்
கோப்பு படம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த சூழலில் குளிர்ச்சியான காலநிலைக்கு பெயர் போன ஜம்மு காஷ்மீரில் கூட பல இடங்களில் சமீப நாட்களாக பதிவாகி வரும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலையாக 34.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீநகரில் மே மாதத்தில் கிட்டத்தட்ட6 தசாப்தங்களில் இல்லாத அளவிற்கான வெப்பநிலை இது என்று வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளதாவது ஸ்ரீநகரில் 34.4 டிகிரி செல்சியஸ் என்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது – இது கடந்த 57 ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 1968-ஆம் ஆண்டு மே 24 அன்று 36.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதன் பிறகு தற்போது தான் இந்த அளவிற்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அதே நேரம் நடப்பாண்டின் மே மாதத்தில் இதுவரை பதிவான மூன்றாவது அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை இதுவாகும் என்றும், முன்னதாக கடந்த 1956-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதியன்று அன்று ஸ்ரீநகர் நகரத்தில் 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். ஸ்ரீநகரில் வியாழன் அன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை, இந்த சீசனிற்கான சராசரியை விட 9 டிகிரி அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதே போல தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியானது மே மாதத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்தது. வியாழக்கிழமை இங்கே வெப்பநிலை 33.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. இதற்கு முன்பு இந்த பகுதியானது கடந்த 2001-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி அன்று அதிகபட்சமாக 32.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல காசிகுண்டில் அதிகபட்சமாக 33.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது 1956-ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மூன்றாவது அதிகபட்ச மே மாத வெப்பநிலையாகும். இருப்பினும், நகரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவான 34 டிகிரி செல்சியஸ் தொடர்ந்து உள்ளது. மேற்கண்ட பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாகி வருவது இந்த கோடையில் இப்பகுதியை வாட்டி வதைக்கும் அசாதாரண வானிலை நிலவும் போக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Location :

Jammu and Kashmir



.

Previous Post

2 நாள் பயணமாக குஜராத் சென்றார் பிரதமர் மோடி.. வதோதராவில் ரோட்ஷோ.. தாஹோதில் ரயில் என்ஜின் தொழிற்சாலையை திறந்து வைத்தார்

Next Post

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல்! இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In