Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொச்சி அருகே நச்சு ரசாயனத்தை எடுத்து வந்த சரக்கு கப்பல் மூழ்கியது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2025
in அரசியல் செய்திகள்
0
கொச்சி அருகே நச்சு ரசாயனத்தை எடுத்து வந்த சரக்கு கப்பல் மூழ்கியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல், கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கப்பல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

தகவலறிந்து வந்த கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கப்பலில் இருந்த 21 மாலுமிகளை கேரள கடலோர காவல் படையினர் மீட்ட நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த கப்பலின் கேப்டன், தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட மூன்று பேரை இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுஜாதா மீட்டது.

லைபீரியா நாட்டு சரக்கு கப்பலில் மொத்தம் 640 கண்டெய்னர்கள் இருந்த நிலையில், அதில் 13 கண்டெய்னர்களில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இருப்பதால் கடலியல் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மேலும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு வேதிப்பொருள் இருப்பதாகவும், இந்த கால்சியம் கார்பைடு உப்புத் தண்ணீரில் கலந்தால் acetylene என்ற வாயுவை உருவாக்கி தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கப்பலில் 84 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 367 மெட்ரிக் டன் உலை எண்ணெய் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சல்பர், cetane உள்ளிட்ட நச்சுத்தன்மை கொண்ட மரேன் எரிவாயு எண்ணெய்யும், கப்பலில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் சல்பர் கலந்த எண்ணெயும் இருப்பதாக இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

100 கண்டெய்னர்கள் வரை கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், கடலில் கொட்டிய எரிபொருள் மற்றும் எண்ணெய்க் கழிவுகளை கடலோர காவல் படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் டோர்னியர் விமானம் மூலம் ரசாயனம் தூவப்பட்டு அகற்றும் பணி நடைபெறுகிறது.

ஆலப்புழா, கொல்லம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அடித்துவரக்கூடிய எந்தவொரு பொருட்களையும் பொது மக்கள் எடுக்க வேண்டாம் எனவும் அதுகுறித்து 112 என்ற எண்ணுக்கு மக்கள் தகவல் தெரிவிக்குமாறும் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

கடலில் கலக்கப்படும் ரசாயனங்களால் ஏற்படும் தீமைகளில் இருந்து மக்களைக் காக்க திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயங்கக் கூடிய அதிவிரைவுப் படை தயார் நிலையில் இருப்பதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பல்..! நச்சுத்தன்மை உள்ள ரசாயனங்கள் மூழ்கியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை



.

Previous Post

சன்ரைசா்ஸ் சாதனையுடன் வெற்றி

Next Post

மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In