Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாகிஸ்தான் எல்லையில் இல்லாத மத்தியப் பிரதேசம்.. இந்திய ராணுவத்திற்கு முக்கிய மாநிலம்.. ஏன் தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 26, 2025
in அரசியல் செய்திகள்
0
பாகிஸ்தான் எல்லையில் இல்லாத மத்தியப் பிரதேசம்.. இந்திய ராணுவத்திற்கு முக்கிய மாநிலம்.. ஏன் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை கிராமங்களில் தாக்குதல் நடத்திவருகிறது. அதேசமயம் இரு நாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் அதிகரித்து வருகின்றன. இதனால், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் முக்கிய விமான நிலையங்களை இந்தியா மூடி ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. மேலும், எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளாத மத்தியப் பிரதேசம், நாட்டின் மையப்பகுதியில், முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ நிறுவனங்களைக் கொண்டிருப்பதால், அதிக பாதுகாப்பிற்குள் இருக்கிறது. நாட்டின் மையப்பகுதியில் சர்வதேச எல்லைகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள மத்தியப் பிரதேசம், பல முக்கிய இராணுவப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடமாக செயல்படுகிறது என்று ஓய்வுபெற்ற கர்னல் டாக்டர் சைலேந்திர சிங் ராணா விளக்கியதாக தைனிக் பாஸ்கர் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்னல் டாக்டர் சைலேந்திர சிங் ராணா தெரிவித்துள்ளதாவது; இந்தியாவின் முப்படைகளுக்கும் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனம் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் தான் இருக்கிறது. அதேபோல், மோவ், சாகர், போபால், கட்னி மற்றும் குவாலியர் ஆகிய நகரங்களில் முக்கிய இராணுவ நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதனால், இந்திய ராணுவத்திற்கு மத்தியப் பிரதேசம் முக்கிய மாநிலமாக இருக்கிறது.

போபால்: மத்தியப் பிரதேசத்தின் தலைநகரமான போபாலில் இராணுவ காலாட்படை பிரிவு மற்றும் CRPF பட்டாலியனும் கொண்டுள்ளது. மட்டுமின்றி BHEL உற்பத்தி ஆலைக்கு தாயகமாக விளங்குகிறது. அதேபோல், சைபர் தலைமையகமாகவும், தரவு மையத்திற்கும் தாயகமாகவும் போபால் இருக்கிறது.

இந்தூர்: மோவில் இருக்கும் இந்தூர் நகரில் ராணுவ போர்க் கல்லூரி இங்கு அமைந்துள்ளது. இங்குதான் மேம்பட்ட ராணுவ பயிற்சிகளும், ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. அதேபோல் இந்தூர், கமாண்டோ பயிற்சி மையமாகவும், பிஎஸ்எஃப் (BSF) துப்பாக்கிச் சூடு தளமும் இருக்கிறது.

குவாலியர்: இங்கு பிஎஸ்எஃப் அகாடமி, ராணுவ தளம், சிஆர்பிஎஃப் பயிற்சி மையம் மற்றும் விமானபடை நிலையம் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், குவாலியர், பாதுகாப்பு ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் DRDE (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) மையத்தையும் கொண்டுள்ளது.

ஜபல்பூர்: இந்த நகரம் 155 மிமீ தனுஷ் ஹோவிட்சர்கள், தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் இந்திய இராணுவத்திற்கான போர் வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய இராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் பல ஆயுத தொழிற்சாலைகளுக்கு தாயகமாக உள்ளது.

கட்னி: கட்னியில் உள்ள பீரங்கித் தொழிற்சாலை இந்திய இராணுவத்திற்காக பீரங்கி குண்டுகள் மற்றும் தோட்டா குண்டுகளை உற்பத்தி செய்கிறது. இந்த நகரம் நாட்டின் ஒரு முக்கிய ரயில் சந்திப்பாகவும் செயல்படுகிறது.

இப்படி மாநிலத்தின் ஐந்து இடங்களில் ராணுவம் தொடர்பான முக்கிய நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் என மத்தியப் பிரதேசம் இந்திய ராணுவத்தின் முக்கிய மாநிலமாக திகழ்ந்துவருகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

பாகிஸ்தான் எல்லையில் இல்லாத மத்தியப் பிரதேசம்.. இந்திய ராணுவத்திற்கு முக்கிய மாநிலம்.. ஏன் தெரியுமா?



.

Previous Post

Vikatan Plus – 01 June 2025 – அட்டைப்படம் விகடன் ப்ளஸ்

Next Post

கனடா வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கனடா வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

கனடா வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In